நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல் : காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தகவல்

May 12 2022 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி. அணிக்கு கேட்பன் பொறுப்பு வகித்த ரவீந்திர ஜடேஜா, முதல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதுவரை விளையாடியுள்ள சென்னை அணி 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தற்போது வரை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை. இந்தநிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், கடந்த மே 8-ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. காயத்திலிருந்து இருந்து அவர் இன்னும் குணமடையவில்லை. இதனால், இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து ரவீந்திர ஜடேஜாவு விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00