செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா பெரிய அளவில் வெற்றிபெறும் : செஸ் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை

May 12 2022 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செஸ் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்களுக்கான முதல் பயிற்சி முகாம் சென்னையில் கடந்த 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒலிம்பியாட் தொடரில் தங்க பதக்கத்தை வெல்ல கிராண்ட்மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்திய வீரர்களுக்கு ஒரு நாளுக்கு 7 மணி நேரம் பயிற்சி வழங்கி வருகின்றனர். செஸ் போட்டிகளில் புதிய நகர்வுகள் என ஒவ்வொரு வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா சார்பாக ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கவுள்ள அணி வீரர்களுக்கு ஜூன் மாதத்தில் பயிற்சி போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அணியின் கிராண்ட்மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00