ஐபில் தொடரின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி - மும்பையின் அபார பந்து​ வீச்சால் படுதோல்வி

May 13 2022 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி​யிடன் சென்னை அணி ப​டுதோல்வி ​அடைந்தது.

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியில், தொடக்க வீரர் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ,ராபின் உத்தப்பா 1 ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களம் இறங்கிய கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இறுதியில் சென்னை ​அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே நேற்றைய போட்டியின்போது டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் சென்னை அணியின் டேவான் கான்வேவுக்‍கு அம்பயர் எல்.பி.டபிள்யு அவுட் கொடுத்தார். ஆனால் கான்வே ரிவியூ எடுக்கலாம் என நினைக்க, மைதானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக டிஆர்எஸ் முறை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கான்வே ரிவியூ கேட்க முடியாமல் வெளியேறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00