ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீரர்களுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு

Jun 24 2022 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற அவிநாசியை சேர்ந்த வீரர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பாலு என்பவர் 75 கிலோ எடை பிரிவிலும், சந்தோஷ் என்பவர் 150 கிலோ எடை பிரிவிலும் கலந்து கொண்டனர். இந்த பளுதூக்கும் போட்டியில் பாலு 4 தங்கப் பதக்கங்களும், சந்தோஷ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர். ஆசிய அளவிலான போட்டியில் தங்க பதக்கங்களுடன் அவிநாசி வந்த வீரர்கள் இருவருக்‍கும் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பால்ராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து வீரர்கள் இருவரும் மேளதாளம் முழங்க அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்‍கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00