சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கிரிக்கெட் போட்டி தொடர் : இறுதிப்போட்டியில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி
Jun 25 2022 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக அணி கேரள அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கிரிக்கெட் அசோசியசன் சார்பாக சென்னை மெரினா மைதானத்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டிக்கு தமிழகம் மற்றும் கேரளா அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக கேரள அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பெரியண்ணன் ஐ.ஆர்.எஸ். பிரபாகரன் ஐ.ஆர்.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.