ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி : 16 முறை சாம்பியனான மும்பையை வீழ்த்திய மத்திய பிரதேசம் அணி
Jun 27 2022 6:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 16 முறை சாம்பியனான மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின. பெங்களூருவில் நடந்த போட்டியில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களும், மத்திய பிரதேசம் அணி 536 ரன்களும் எடுத்தன. 162 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, நிதானமாக விளையாடியது. எனினும் தொடர் விக்கெட் இழப்பால் மும்பை அணி ரன்களை எடுக்க முடியாமல் திணறியது. இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது நாள் ஆட்டத்தில், மும்பை அணி 268 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் பறிக்கொடுத்தது. 108 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேச அணி, 4 விக்கெட்களை இழந்து 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 16 முறை சாம்பியனான பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.