விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி - தொடரில் இருந்து வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம்

Jun 29 2022 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே அமெரிக்‍க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

நடப்பு ஆண்டுக்‍கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ​தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்‍கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், சுவிட்சர்லாந்து வீரர் Alexander Ritschard உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 7-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்‍கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் அமெரிக்‍காவை சேர்ந்த முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பிரெஞ்ச் வீராங்கனை Harmony Tan உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் Harmony Tan 7-5, 1-6, 7-6 என்ற செட் கணக்‍கில் செரீனாவை வீழ்த்தினார். விம்பிள்டன் டென்னிஸ் ​தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்‍கப்பட்ட செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00