இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மார்கன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு - எதிர்காலம் சிறக்‍க சக வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து

Jun 29 2022 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் இயான் மார்கன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இயான் மார்கன் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. 13 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இயான் மார்கன், இங்கிலாந்து அணிக்கு 2019ல் உலகக் கோப்பை வென்று கொடுத்தார். 2010ல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்றபோது அதிலும் மார்கன் விளையாடியிருந்தார். 225 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன் 13 சதங்கள் உள்பட 6 ஆயிரத்து 957 ரன்கள் குவித்துள்ளார். 72 டி-20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 115 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன் 2 ஆயிரத்து 458 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன், இரண்டு சதம் அடித்துள்ளார். இதுவரை 83 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடியுள்ள இயான் மார்கன் ஆயிரத்து 405 ரன்கள் எடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00