அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி

Jun 29 2022 7:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்‍கில் டி-20 தொடரை இந்தியா வென்றது.

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்‍கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்‍க ஆட்டக்‍காரர் இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களும், தீபக் ஹூடா 57 பந்துகளில் 104 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்‍கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி, 20 ஒவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்‍கில் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், பிஸ்னோய் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00