இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது

Jul 1 2022 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் இந்த டெஸ்டில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாடாத ஆண்டர்சன் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00