இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகிறார், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா - தேர்தலில் யாரும் போட்டியிட விண்ணப்பிக்காத நிலையில் ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு
Nov 28 2022 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் வரும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பி.டி.உஷா மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற சாதனை படைத்துள்ளார். அவருக்கு இப்போதே பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பி.டி.உஷா, 4 மாதங்களுக்கு முன்தான் மத்திய அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.