ஐபிஎல் தொடருக்காக வலைப்பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி - வீரர்கள் வீசும் பந்துகளை சிக்சர்களாக விளாசும் காட்சிகள் இணையத்தில் வைரல்
Feb 1 2023 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
16வது ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தொடங்கியுள்ளார். பயிற்சியின் போது பந்துகளை சீக்சர்களாக விளாசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றன. 16வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான வலைப்பயிற்சியை கேப்டன் தோனி தொடங்கியுள்ளார். அப்போது வீரர்கள் வீசும் பந்துகளை சிக்சர்களாக விளாசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றன. தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில்தான் விளையாடுவேன் என தெரிவித்திருந்த நிலையில், இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல்-லாக இருக்கும் என கருதப்படுகிறது.