அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
Feb 1 2023 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானா மாநிலம் கார்கோடாவில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 106 சிறுவர் சிறுமியர் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு அதிக புள்ளிகளில் வெற்றி பெற்று 57 தங்கம், 31 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.