16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி - ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

May 30 2023 8:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய குஜராத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா 56 ரன்களும் விளாசினர். சென்னை அணி தரப்பில் பதிரானா 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில்லை ஸ்டெம்பிங் செய்து அவுட்டாக்கிய தோனியின் செயல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாகி உள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஏழாவது ஓவரை ஜடேஜா வீசினார். வேகமாக சென்ற பந்து பேட்ஸ்மேன் சுப்மன் கில்லை தாண்டி கேப்டன் தோனியின் கைகளில் தஞ்மடைந்தது. பந்தை பிடித்த தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் 0.1 வினாடியில் ஸ்டெம்பிங் செய்து சுப்மன் கில்லை வெளியேற்றினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தோனியின் மேஜிக் என பலரும் பாராட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக், வங்கியில் இருந்து ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் ஆனால் விக்கெட்டுக்கு பின்னால் தோனியை மாற்ற முடியாது என பாராட்டியுள்ளார்.

போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் இரண்டாவது பகுதி ஆட்டம் நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கியது. இதனால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும், கான்வேவும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய கான்வே 47 ரன்களிலும், கெய்க்வாட் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஷிபம் துபேவும், ரஹானேவும் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். ரஹானே 27 ரன்களிலும், தனது கடைசி ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி டக்அவுட் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட, சிக்ஸர், பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

வெற்றியோ, தோல்வியோ எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கூல் கேப்டன் என வர்ணிக்கப்படும் தோனி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மைதானத்தில் இருந்து ஓடிவந்த ஜடேஜாவை தூக்கிக்கொண்டாடினார். தோனியின் இந்த வெற்றிக் கொண்டாட்டம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெற்றி பெற்ற பின்னர் பேசிய ஆல்ரவுண்டர் ஜடேஜா, இந்த வெற்றியை தோனிக்கு சமர்ப்பிப்பதாகவும், இந்த வெற்றி தோனிக்கானது எனவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாவது இடம்பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. சென்னை அணி வெற்றி பெற்றதால் அகமதாபாத்தில் குவிந்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள் கத்தி ஆர்ப்பரித்து வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.

5வது முறையாக ஐபிஎல் கோப்பையில் தனது முத்திரையை பதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் பலரும் தோனிக்கும், சென்னை அணிக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00