ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிக ரன் கொடுத்த 3வது பந்துவீச்சாளர் : சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே
May 30 2023 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களை வீசி 56 ரன்களை தாரை வார்த்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை வழங்கிய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை துஷார் பாண்டே படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2016-ல் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் ஷேன் வாட்சன் 61 ரன்களையும், 2021-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக கொல்கத்தாவின் லாக்கி பெர்குசன் 56 ரன்களையும் விட்டுக் கொடுத்திருந்தனர்.