"அன்பை காட்டுபவர்களுக்கு தரக்கூடிய பரிசு ஒரு சீசனில் விளையாடுவதுதான்" - ஐபிஎல் வெற்றிக்கு பிறகு சென்னை ரசிகர்கள் குறித்து தோனி நெகிழ்ச்சி
May 30 2023 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ரசிகர்களுக்கு திருப்பி தரக்கூடிய பரிசு, அவர்களுக்காக இன்னும் ஒரு சீசனில் விளையாடுவதுதான் என்று கேப்டன் தோனி தனது ஐபிஎல் ஓய்வு குறித்த மர்மத்தை உடைத்துள்ளார். 10 ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தோனி தலைமையிலான சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை வென்று முத்திரைப் பதித்தது. வெற்றிக்குப் பின் பேசிய தோனி, ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம் என்றும், ஆனால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு சீசனில் விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு தனது உடல் தாங்க வேண்டும் என்று கூறிய தோனி, ஓய்வு முடிவு எல்லாம் உடல் ஒத்துழைப்பை பொறுத்து உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை ரசிகர்களால் பெற்ற அன்பின் அளவுக்கு, அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான் என்றும் தோனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.