பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - 3வது சுற்றுக்கு ஸ்வியாடெக் முன்னேற்றம் : அமெரிக்க வீராங்கனையை 6-4, 6-0 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி அபாரம்
Jun 2 2023 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கிளாரி லியு ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் கிளாரி லியுவை திணறடித்த ஸ்வியாடெக், 6-4, 6-0 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.