தன் விரலில் பட்ட காயம் ஆட்டத்தை பாதிக்கவில்லை : இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அஜிங்க்யா ரஹானே தகவல்
Jun 10 2023 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தன் விரலில் பட்ட காயம் ஆட்டத்தை பாதிக்கவில்லை என்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, 129 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடுமையான பந்துகளை வீசினர். இதில், ரஹானேவுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதைப்பொருட்படுத்தாமல் அவர் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். தனது காயம் குறித்து பேசிய ரஹானே, தன் விரலில் பட்ட காயம் ஆட்டத்தை பாதிக்கவில்லை என கூறினார்.