இந்திய வீரர் ரஹானே அடித்த பந்தை கேமரூன் ஒரு கையில் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரல்
Jun 10 2023 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வீரர் ரஹானே அடித்த பந்தை கேமரூன் ஒரு கையில் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அஜிங்க்யா ரஹானே 129 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்தார். அப்போது, 62வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை ரஹானே விளாசியபோது, அதனை கேமரூன் கீரின் ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.