பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச் : மற்றொரு போட்டியில் ஜெர்மன் வீரரை வீழ்த்தி ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Jun 10 2023 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். பாரீசில் நடைபெற்று வரும் போட்டியில் ஆண்களுக்கான முதல் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும் மோதினர். இதில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6க்கு 3 என எளிதில் வென்றார். சுதாரித்து கொண்ட கார்லோஸ் அல்காரஸ் 2வது செட்டை போராடி 7க்கு 5 என கைப்பற்றினார். இதையடுத்து, மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை ஜோகோவிச் 6-1, 6-1 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல மற்றொரு அரையிறுத்திப்போட்டியில் ஜெர்மன் வீரர் சுவேரெவை வீழ்த்தி நார்வே வீரர் காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.