பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கரோலினா முச்சோவா : மற்றொரு ஆட்டத்தில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Jun 10 2023 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்சு ஓபன் டென்னிசில் செக் குடியரசை சேர்ந்த வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பாரிசில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் பெல்லாரசின் சபலெங்கா, செக் குடியரசை சேர்ந்த கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார். இதில், 2க்கு 1 என்ற செட் கணக்கில் சபலெங்காவை வீழ்த்தி முச்சோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல மற்றொரு ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை பீட்ரில் ஹாடட் மையாவை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6க்கு 2, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.