இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகல் - கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி - உலகக் கோப்பையை வென்று தந்த சிறந்த கேப்டன் என முன்னாள் வீரர்கள் பாராட்டு

Jan 5 2017 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி திடீரென அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனி, தற்போது தனது ஜார்க்கண்ட் அணியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதன்காரணமாக, அந்த அணி, நடப்பு ரஞ்சிக்கோப்பை தொடரில் முதல்முறையாக அரையிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி திடீரென அறிவித்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான அரையிறுதியில் ஜார்க்கண்ட் அணி விளையாடிக் கொண்டிருந்த போது, தனது முடிவை தோனி கூறியதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிராசாத் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தியுள்ள பி.சி.சி.ஐ. கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு அவர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்ற மகேந்திர சிங்தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக T-20உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. தொடர்ந்து, 2011-ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிக்கான உலக கோப்பையையும் வென்று தோனி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்தது. மேலும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று முத்திரை பதித்தது. அவரது தலைமையில் 199 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி, 110 போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது. இதேபோல், 72 டி-20 போட்டிகளில் 41 வெற்றிகளை இந்திய அணி குவித்துள்ளது.

வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனி, கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டனாக தோனி தொடர்ந்து களமிறங்கினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள தோனி, தற்போது கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதேவேளை, தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீகாந்த், மதன்லால், தீப்தாஸ் குப்தா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்தவர் தோனி எனவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00