சென்னை ஓபன் டென்னிஸ் - இரட்டையர் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா - நெடுஞ்செழியன் இணை முன்னேற்றம் - ஆடவர் ஒற்றையரில் யூகி பாம்ப்ரி அதிர்ச்சி தோல்வி

Jan 6 2017 8:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் போபண்ணா - நெடுஞ்செழியன் இணை, அமெரிக்காவின் Cerretani - ஆஸ்திரியாவின் Philipp Oswald இணையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

தமிழக அரசு வழங்கிய 2 கோடி ரூபாய் நிதியுதவியுடன், சென்னை ஓபன் ATP டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டி ஒன்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன் இணை, அமெரிக்காவின் Cerretani - ஆஸ்திரியாவின் Philipp Oswald இணையை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வென்ற போபண்ணா இணை, 2-வது செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அனல் பறந்தது. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா இணை, 12-10 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியின் முடிவில், 6-2, 3-6, 12-10 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் Cerretani - ஆஸ்திரியாவின் Philipp Oswald இணையை தோற்கடித்து போபண்ணா - நெடுஞ்செழியன் இணை அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஃபிரான்சின் Benoit Paire-விடம் 6-3, 6-4 என்ற நேர்செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00