ராமநாதபுரத்தில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான மகளிர் ஹாக்கி போட்டிகளில், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் அணிகள் வெற்றி

Jan 6 2017 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தில் முதல்முறையாக, தேசிய அளவிலான ஜுனியர் மகளிர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் 800 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில், மத்தியப்பிரதேசம் - புதுச்சேரி அணிகள் மோதின. இதில், 5-0 என்ற கோல் கணக்கில் மத்தியப்பிரதேசம் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், ஹிமாச்சலப் பிரதேச அணி, 17-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை தோற்கடித்தது. இதேபோல், டட்ராநாகர்ஹவேலி அணியை, ஜம்மு-காஷ்மீர் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தேசிய அளவிலான இப்போட்டிகள், வரும் 22-ம் தேதிவரை நடைபெறுகின்றன.

இதனிடையே, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சேலம் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் தடகளப் போட்டிகள், நேற்று தொடங்கின. 2 நாள் நடைபெறும் இப்போட்டிகளில், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாணவிகள் முதல் இரு இடங்களையும், ஈட்டி எறிதல் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவி கீர்த்தனா முதலிடத்தையும் பிடித்தனர். நீளம் தாண்டுதல் போட்டியில் திருச்செங்கோடு மாணவி ராஜேஸ்வரியும், உயரம் தாண்டுதல் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவி செளமியாவும் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00