இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி - முடிவை மாற்றிக் கொள்ள பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்

Jan 6 2017 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். தோனி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 2007-ம் ஆண்டு பதவியேற்ற மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா முதன்முறையாக T-20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. தொடர்ந்து, 2011-ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிக்கான உலக கோப்பை, 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று முத்திரை பதித்தது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாக வலம் வந்த தோனி, சர்வதேச அரங்கிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி திடீரென அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00