Hopman கோப்பைக்கான டென்னிஸ் போட்டி : ஜெர்மனி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 6 2017 8:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Hopman கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி 2-க்கு ஒன்று என்ற புள்ளிக்கணக்கில் பிரிட்டனை வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

பெர்த் நகரில் 2017-ம் ஆண்டுக்கான Hopman கோப்பை டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஃபிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற போட்டியில், ஜெர்மனி அணி, பிரிட்டன் அணியை 2-க்கு ஒன்று என்ற ஆட்டக் கணக்கில் வென்றுள்ளது. முதலில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிரிட்டனின், ஹீத்தர் வாட்சன், ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிக்கை எதிர்கொண்டார் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், வாட்சன், 6-2, 7-3 என்ற செட்கணக்கில் எளிதாக வென்றார்.

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் Alexander Zverev, பிரிட்டனின் டேன் இவானை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

இந்நிலையில், இருநாடுகளுக்கிடையிலான வெற்றியை நிர்மாணிக்கும் கலப்பு இரட்டையர் போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி அணி, பிரிட்டனை, 4-2, 4-2 என்ற செட்கணக்கில் வென்று பிரிட்டனை வீழ்த்தியது. இதன் மூலம் இப்போட்டித் தொடரில், 2க்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00