இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் - விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

Jan 6 2017 8:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு போட்டித் தொடர்களுக்கும், விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி புனேயில் நடைபெறுகிறது. 19ம் தேதி கட்டாக்கில் 2வது ஒருநாள் போட்டியும், 22ம் தேதி கொல்கத்தாவில் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு, 15 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஒருநாள் போட்டியில், கேப்டன் விராட் கோலி, மகேந்திரசிங்தோனி, லோகேஷ் ராகுல், ஷிகர்தவான், மனீஷ்பாண்டே, கேதார் ஜாதவ், யுவராஜ்சிங், அஜிங்க்யா ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, அமித்மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேப்டன் விராட் கோலி, மகேந்திரசிங் தோனி, மந்தீப் சிங், லோகேஷ் ராகுல், யுவராஜ் சிங், ரெய்னா, ரிஷபா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, யஷ்வேந்திரா சாஹல், மனீஷ்பாண்டே, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

யுவராஜ் சிங் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதால் விராத் கோலிக்கு அப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தோனி விக்கெட் கீப்பராக அணியில் தொடர்கிறார். டி-20 போட்டிகள் வரும் 26ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00