ராமநாதபுரம், தூத்துக்குடியில் நடைபெற்ற கேலோ விளையாட்டுப் போட்டிகள் : ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Jan 7 2017 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கேலோ விளையாட்டுப் போட்டிகளில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கேலோ விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இருபாலருக்கும் தனித்தனியே இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கேலோ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. நீச்சல், கபடி, பளுதூக்குதல், தடகம் உள்ளிட்ட 10 விளையாட்டுகள் பரிசுப் போட்டிகளாகவும், மல்யுத்தம், கோகோ, ஹாக்கி உள்ளிட்ட 11 விளையாட்டுகள் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகளாகவும் நடைபெறுகின்றன.

இதேபோல், தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேலோ விளையாட்டுப் போட்டிகளில், மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரத்து 200 பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். தடகளம், வில்வித்தை, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட 20 வகையான போட்டிகளில், மாணவ-மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே, நெல்லை மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தில், பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கூடை பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், மாவட்டத்தைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றுள்ளன. பகல் மற்றும் மின்னொளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், மாணவ-மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக் கழக சாம்பியன் பட்டத்திற்கான கால்பந்து லீக் போட்டிகள், திருச்சியில் தொடங்கியுள்ளன. இதில், திருச்சி மற்றும் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த 4 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் நாளான நேற்று நடைபெற்ற போட்டியில், ஜமால் முகம்மது கல்லூரி அணி, காரைக்கால் டி.வி.எம். கல்லூரி அணியை 12-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில், திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி, புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரியை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இப்போட்டிகள் தொடர்ந்து, இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00