சென்னை ஓபன் டென்னிஸ் - இரட்டையர் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ராஜா - சரண் இணை முன்னேற்றம்

Jan 7 2017 9:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு, ஆர்ஜெண்டினா இணையை வென்று இந்தியாவின் ராஜா - சரண் இணை முன்னேறியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் ATP டென்னிஸ் போட்டிகள், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் புரவ் ராஜா - திவிஜ் சரண் இணை, ஆர்ஜென்டினாவின் கில்லர்மோ டுரன், ஆன்ட்ரஸ் மால்டினி இணையை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜா - சரண் இணை, 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் ஆர்ஜெண்டினா இணையை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதேபோல், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஃபிரான்சின் Benoit Paire, பிரிட்டனின் அல்ஜாஸ் பெடினியை எதிர்கொண்டார். இப்போட்டியில், Benoit, 6-3, 6-0 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் பாடிஸ்டா அகட், ரஷ்யாவின் மிகைல் யூஸ்னியை, 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00