ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் போட்டி : அமெரிக்க அணியை தோற்கடித்து, ஃபிரான்ஸ் 2-வது முறையாக கோப்பை வென்றது

Jan 8 2017 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் இறுதிச்சுற்றில், அமெரிக்க அணியை தோற்கடித்து, ஃபிரான்ஸ் 2-வது முறையாக கோப்பை வென்றது.

சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடர், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிச்சுற்று, நேற்று நடைபெற்றது. இதில், ஃபிரான்ஸ் - அமெரிக்க அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், ஃபிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கட் - அமெரிக்காவின் Jack Sock-ஐ எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 5-7, 7-6 என்ற செட் கணக்கில் கேஸ்கட் வெற்றிபெற்று அணியை முன்னிலை பெற செய்தார்.

பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், அமெரிக்காவின் Coco Vandeweghe, ஃபிரான்சின் கிறிஸ்டினா மலாடனோவிச்சை 6-4, 7-5 என்ற நேர் செட்கணக்கில் தோற்கடிக்க இரு அணிகளும் சமநிலைப் பெற்றன.

இதனால், வெற்றியை தீர்மானிக்கும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், ஃபிரான்சின் மலானனோவிச் - ரிச்சர்ட் கேஸ்கட் இணை, அமெரிக்காவின் Vandeweghe - Sock இணையை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரான்ஸ் இணை, 4-1, 4-3 என்ற செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அமெரிக்க இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன்மூலம், 2-1 என்ற கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்து, ஃபிரான்ஸ் அணி, 2-வது முறையாக ஹாப்மேன் கோப்பையை வென்று அசத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00