தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பசுமைப் பாதுகாப்பு, தூய்மை இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தி மினிமாரத்தான் ஓட்டப்பந்தயங்கள்

Jan 8 2017 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பசுமைப் பாதுகாப்பு, தூய்மை இந்தியா ஆகியவற்றை வலியுறுத்தி, மினிமாரத்தான் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டன.

நெல்லையில் பசுமை மற்றும் சாலைபாதுகாப்பை வலியுறுத்தி நெல்லை மாநகர காவல் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான்,பாளையங்கோட்டை மேட்டுத்திடல், மகாராஜாநகர் வழியாக வி.எம்.சத்திரம் சீனிவாச நகர் அருகே முடிவடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்,காவல் துறையினர் உள்பட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் திரு. திருஞானம் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தூத்துக்குடியில் துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி பழைய துறை முகத்தில் துவங்கிய இந்த போட்டியை துறைமுக சபை தலைவர் திரு. ஆனந்த் சந்திர போஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் உள்பட சுமார் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நோயில்லா வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் என்ற தலைப்புகளின் அடிப்படையில் மதுரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 15, 13 மற்றும் 10 என்ற வயதின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. சர்வேயர்காலனி பகுதியில் இருந்து புறப்பட்ட மாரத்தான் நகரின் பல்வேறு சாலைகள் வழியாக சென்று அல் அமின் நகரில் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்த மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் கோவை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் மாநில அளவிலான முத்துமாரத்தான்தொடர் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் திரு.பால் பிரின்ஸிலி ராஜ்குமார், மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00