சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன் இணை முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று முத்திரைப் பதித்தது

Jan 9 2017 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு வழங்கிய 2 கோடி ரூபாய் நிதியுதவியுடன், சென்னை நுங்கம்பாக்கத்தில், தெற்காசியாவில் ஏ.டி.பி. வேல்டு டூர் அந்தஸ்து பெற்ற ஒரே தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 2-ம் தேதி தொடங்கின. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன் இணை, சகநாட்டைச் சேர்ந்த புரவ் ராஜா - திவிஜ் சரண் இணையை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே தங்களது சிறப்பான ஆட்டத்தால், ராஜா - சரண் இணையை திணறடித்த போபண்ணா இணை, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், சென்னை ஓபன் இரட்டையர் பிரிவில், கடந்த 2011-ம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய இணை முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவும், ஸ்பெயினின் பாடிஸ்டா அகட்டும் மோதினர். இப்போட்டியில், மெட்வடேவை 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில்எளிதில் தோற்கடித்து அகட் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் சென்னை ஓபன் பட்டத்தை வெல்லும் ஸ்பெயின் வீரர் என்ற பெருமையை பாடிஸ்டா அகட் பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00