தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்

Jan 9 2017 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 32 அணிகளும் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ஆடவர் பிரிவில் திண்டுக்கல் அணியும், மகளிர் பிரிவில் வேலூர் அணியும் முதலிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. வினய் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

கொடைக்கானலில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. 16 மற்றும் 17 வயது உடையவர்களுக்கான போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெறும் வீரர்களுக்கு நாளை பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

நெல்லை மாநகர காவல்துறை, மாவட்ட காவல்துறை சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தடகளம், கயிறு இழுத்தல், மியூசிக்கல்சேர் உள்ளிட்ட போட்டிகளில் 800 பேர் கலந்துகொண்டனர்.

மாவட்ட அளவிலான கேலா விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஜுடோ, வில்வித்தை, கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் வயது அடிப்படையில் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் சிறந்த வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00