தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் : தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Jan 10 2017 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பள்ளி மாணவ-மாணவிகள் பங்குபெறும் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி மற்றும் வளைய பந்து போட்டி, நாகையில் தொடங்கியுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் இப்போட்டியில், மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில், சென்னை, திருச்சி, கடலூர், கோவை, நாகை உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்டப் போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 40 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 2963.00
மும்பை Rs. 2851.00 Rs. 2955.00
டெல்லி Rs. 2864.00 Rs. 2969.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 2966.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.30 Rs. 41415.00
மும்பை Rs. 44.30 Rs. 41415.00
டெல்லி Rs. 44.30 Rs. 41415.00
கொல்கத்தா Rs. 44.30 Rs. 41415.00