2016-ம் ஆண்டு FIFA கால்பந்து விருதுகள் அறிவிப்பு - சிறந்து வீரருக்கான விருதை வென்றார் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Jan 10 2017 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
2016-ம் ஆண்டின் சிறந்து கால்பந்து வீரருக்கான FIFA விருது போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோவுக்கு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு FIFA விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2016-ம் ஆண்டுக்கான FIFA விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சுவிட்சர்லாந்து தலைநகர் Zurich-ல் நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான FIFA விருதுக்கு போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.

முன்னணி வீரரான ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸி, ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ இந்த விருதை வென்றுள்ளார். சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோ கோப்பைகளை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

முன்னதாக, சிறந்த ஆடவர் பயிற்சியாளருக்கான விருது, Leicester City FC அணியின் Claudio Ranieri-க்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை, ஆர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா, Ranieri-க்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, சிறந்த கோலுக்கான FIFA Puskas விருதுக்கு, மலேசிய வீரர் Mohd Faiz bin Subri தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பிரசில் முன்னாள் வீரர் ரொனால்டோ, விருது வழங்கி கவுரவித்தார்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான FIFA விருதுக்கு, அமெரிக்காவின் கார்லி லோய்டு தேர்வு செய்யப்பட்டார். இவ்விருதை, ஆர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் Gabriel Batistuata, கார்லி லோய்டுக்கு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், உலகின் முன்னணி கால்பந்து வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00