அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்றதையொட்டி, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து : சின்னம்மா, தலைமைக் கழகத்தில் பொறுப்பேற்ற பின்னர் ஆற்றிய எழுச்சி உரை, உத்வேகத்தையும், மிகுந்த ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டு

Jan 10 2017 9:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்றதை யொட்டி சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், பல்வேறு தரப்பினரும் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று, ரக்பி மற்றும் கூடைப்பந்து விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில், ரக்பி கால்பந்து சங்கத்தின் சேர்மன் திரு.R. பரணீஸ்வரன், தலைவர் திரு.V.V.R. ராஜ் சத்யன், செயலாளர் திரு. செந்தில் தியாகராஜன் ஆகியோர் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு சின்னம்மா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் நடைபெற்ற தேசிய ரக்பி கால்பந்து போட்டிகளில் விளையாடி, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்ததற்கான கோப்பையை, ரக்பி கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 20 பேரும் சின்னம்மாவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

சின்னம்மாவை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் திரு.V.V.R. ராஜ் சத்யன், துணைத் தலைவர் திரு. செந்தில் தியாகராஜன், பொருளாளர் திரு. ஆந்திரபதி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு சின்னம்மா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கர்நாடக மாநிலத்தில், தேசிய அளவில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் முதலிடத்தை பிடித்ததற்கான கோப்பையை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் 12 பேரும் சின்னம்மாவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00