திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர்வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டியில், பெண்கள் பிரிவில் சேலம் அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின

Jan 11 2017 9:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் வாலிபால் சம்மேளம் சார்பில் 43வது மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் நேற்று வரை நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் 27 மாவட்ட அணிகளும், பெண்கள் பிரிவில் 22 மாவட்ட அணிகளும் பங்கேற்று 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் இறுதிப் போட்டியில், சேலம் மற்றும் ஈரோடு அணிகள் மோதின. இதில் சேலம் அணி, ஈரோடு அணியை 25-16, 25-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதேபோல், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணி, கிருஷ்ணகிரி அணியை 25-16, 25-19 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. வெற்றிபெற்ற அணியினருக்கும், சிறந்த வீரர்களுக்கும் கோப்பைகளுடன், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி மாநிலம் கூடைப்பந்து சங்கம் சார்பில் 67வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 14ம்தேதி வரை நடைபெறும் இப்போட்டிகள் புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், சண்டிகர் உள்பட 26 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 4வது நாளாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆண்கள் பிரிவில் புதுச்சேரி அணி, திரிபுராவையும், உத்தரகண்ட் மாநில அணி, சத்தீஸ்கர் அணியையும்வென்றன. இதேபோல், தமிழ்நாடு அணி, பலம்வாய்ந்த ரயில்வே அணியையும், பீகார் அணி, புதுச்சேரி அணியையும் வென்றன. பெண்கள் பிரிவில், இந்தியன் ரயில்வே, கர்நாடகா, தெலங்கானா, குஜராத், ஒடிசா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00