ராமநாதபுரத்தில் களைகட்டிய இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த வண்டிகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்

Feb 11 2017 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகளுடன், வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள நரிப்பையூர் முனிஸ்வரன் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் பங்கேற்றனர். இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்திச் சென்ற மாட்டு வண்டிகளை, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கல்லல் பகுதி முதல் ஆலங்குடி வரை 15 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டிகளும், வீரர்களும் பங்கேற்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00