இந்திய சுற்றுப்பயணத்தின்போது சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

Feb 15 2017 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய சுற்றுப்பயணத்தின்போது சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருப்பதாகக் கூறினார். இந்திய பந்து வீச்சாளர் அஷ்வின் பந்துவீச்சை சமாளிப்பது கடினமானது என்றும் தெரிவித்தார்.

இந்திய அணியில், கேப்டன் விராட்கோலி மட்டுமின்றி மற்றவர்களும் சிறப்பாக பேட்டிங் செய்வதால் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் திட்டமிடுவது அவசியம் என்றும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, புனேவில் வரும் 23-ந் தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ம் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 25-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனைவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00