தேசிய வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற அசாம் மாநில வீராங்கனை தற்போது அன்றாட குடும்பத் தேவைகளுக்காக சாலையோரம் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்கிறார்

Feb 15 2017 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற அசாம் மாநில வீராங்கனை, தற்போது தனது அன்றாட குடும்பத் தேவைகளுக்காக சாலையோரம் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

அசாம் மாநிலத்தில் Bodo பழங்குடியினத்தைச் சேர்ந்த Basumatary என்ற வீராங்கனை, தான் பங்கேற்ற முதலாவது தேசிய வில்வித்தை போட்டியிலேயே 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். சப்ஜுனியர் அளவிலான இந்தப் போட்டி ஆஜ்மீரில் கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் சீனியர் அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் Basumatary, தங்கப்பதக்கம் வென்றார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்தகுதி பிரச்னை காரணமாக, வில்வித்தை விளையாட்டிலிருந்து விலகி, தற்போது 2 குழந்தைகளுக்கு தாயான அவர், அசாம் மாநிலத்தின் Chirang பகுதியில் தனது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக, சாலையோரம் ஆரஞ்சு பழங்களை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.தேசிய அளவில் பதக்கங்கள் குவித்த ஒரு வீராங்கனைக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை அப்பகுதி மக்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது. இதுநாள்வரை பாராமுகமாக இருந்த அசாம் மாநில அரசு, அடுத்த வாரத்தில் வில்வித்தை பயிற்சியாளராக Basumatary-ஐ நியமிக்க இருப்பதாக இப்போது அறிவித்திருப்பது ஒரு ஆறுதலான நடவடிக்கையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00