வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை தொடர்பாக பி.சி.சி.ஐ.-க்கு அனுமதி அளித்த விவகாரம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரவி சாஸ்திரி கண்டனம்

Feb 17 2017 9:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில், வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை மாற்றத்திற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதியளித்துள்ளதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் துபாயில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்கப்படும் நிதிக்கான வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை மாற்றம் செய்யப்பட்டது. இதனால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ஆயிரத்து 270 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு, அதிக வருவாய் ஈட்டித்தரும் BCCI-க்கு, இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில், வருவாய் பகிர்ந்தளிப்பு விதிமுறை மாற்றத்திற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். BCCI-ல் தற்போது நிலவும் குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, சில நாடுகள் மிகப்பெரும் தவறு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 80 சதவீத வருமானம் BCCI மூலமாகக் கிடைப்பதாகவும், அதனால், அதிக வருவாய் கேட்டுப் பெற BCCI-க்கு தகுதி உள்ளதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00