இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்திய அணியில் மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

May 19 2017 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில், மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி, அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, 'பி' பிரிவில் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இளம் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே, நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியின் போது காயமடைந்தார். அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2709.00 Rs. 2897.00
மும்பை Rs. 2728.00 Rs. 2889.00
டெல்லி Rs. 2740.00 Rs. 2902.00
கொல்கத்தா Rs. 2740.00 Rs. 2899.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00