இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் - 3-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

May 19 2017 9:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னணி வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் இஸ்னரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றுவரும் இத்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் பவுடிஸ்டா அகட்டை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் அகட்டை தோற்கடித்து ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும், அமெரிக்காவின் ஜான் இஸ்னரும் மோதினர். இப்போட்டியில் வாவ்ரிங்கா எளிதில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜான் இஸ்னர் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பமும் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் வாரிங்காவை திணறடித்த இஸ்னர், முடிவில் 7-6, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த வாவ்ரிங்கா, 3-வது சுற்றிலேயே தொடரிலிருந்து சோகத்துடன் வெளியேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2709.00 Rs. 2897.00
மும்பை Rs. 2728.00 Rs. 2889.00
டெல்லி Rs. 2740.00 Rs. 2902.00
கொல்கத்தா Rs. 2740.00 Rs. 2899.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00