டூர் ஆஃப் கலிஃபோர்னியா சைக்கிள் பந்தயத்தின் 5-வது சுற்றில், அமெரிக்காவின் ஆண்ட்ரூ டலான்ஸ்கி முதலிடம் பிடித்தார் : ஒட்டுமொத்தமாக போலந்தின் Rafal Majka தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்

May 19 2017 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
டூர் ஆஃப் கலிஃபோர்னியா சைக்கிள் பந்தயத்தின் 5-வது சுற்றில், அமெரிக்காவின் ஆண்ட்ரூ டலான்ஸ்கி முதலிடம் பிடித்தார். எனினும், ஒட்டுமொத்தமாக போலந்தின் Rafal Majka தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அமெரிக்காவில், 12-வது ஆண்டு டூர் ஆஃப் கலிஃபோர்னியா சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. முதல்முறையாக நடப்பு UCI World Tour சைக்கிள் பந்தயத் தொடரில் இடம்பெற்றுள்ள இப்பந்தயம், 7 நிலைகளாக மொத்தம் 938 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 நிலைகள் நிறைவடைந்த நிலையில், 5-வது நிலை பந்தயம், Ontario நகரம் முதல் Mount Baldy வரை சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பந்தயத்தில், தொடரில் முன்னிலையில் உள்ள போலந்தின் Rafal Majka-வை பின்னுக்குத் தள்ளி, அமெரிக்காவின் Andrew Talansky முதலிடம் பிடித்தார். எனினும், 5 நிலைகளின் முடிவில், Rafal Majka, ஒட்டுமொத்தமாக 19 மணிநேரம் 47 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2940.00 Rs. 3150.00
மும்பை Rs. 2961.00 Rs. 3136.00
டெல்லி Rs. 2974.00 Rs. 3163.00
கொல்கத்தா Rs. 2974.00 Rs. 3147.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.40 Rs. 43400.00
மும்பை Rs. 43.40 Rs. 43400.00
டெல்லி Rs. 43.40 Rs. 43400.00
கொல்கத்தா Rs. 43.40 Rs. 43400.00