இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் 7 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி தோல்வி

May 20 2017 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதியில், 7 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றுவரும் இத்தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதினர். இப்போட்டியில், ஆரம்பம் முதலே தீமின் சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய நடால், 4-6, 3-6 என்ற நேர் செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இதன் மூலம், 7 முறை இத்தாலி ஓபன் சாம்பியனான நடாலை தோற்கடித்து, டொமினிக் தீம், அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன், இந்த ஆண்டு நடைபெற்ற Clay Court Tennis தொடரில் 17 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத நடாலின் வெற்றிப் பயணமும் முடிவுக்கு வந்தது. இத்தாலி ஓபன் காலிறுதியில் நடாலை வென்றதன் மூலம், அண்மையில் முடிந்த பார்சிலோனா மற்றும் மேட்ரிட் டென்னிஸ் தொடரில் அவரிடம் அடைந்த தோல்விக்கு தீம் பழி தீர்த்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00