ஐ.சி.சி தொடரில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா

Jun 19 2017 9:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிபோட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான் 106 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். ஹசர் அலி, முகமது ஹபீஸ் ஆகியோர் அரை சதம் அடித்து பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினர். இதனையடுத்து 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 339 ரன்களை எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து இறங்கிய, கோலி, தவான், யுவராஜ்சிங், தோனி போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய ஹர்திக்பாண்டியா மட்டும் 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இந்திய அணி 30 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 158 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று பாகிஸ்தான் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2831.00 Rs. 3028.00
மும்பை Rs. 2852.00 Rs. 3020.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00