விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் : மகளிர் இரட்டையர் பிரிவில் ரஷ்யாவின் வெஸ்னினா - மகரோவா இணை முதல்முறையாக பட்டம் வென்றது
Jul 16 2017 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ், மகளிர் இரட்டையர் பிரிவில், ரஷ்யாவின் வெஸ்னினா - மகரோவா இணை முதல்முறையாக பட்டம் வென்று முத்திரைப் பதித்தது.
டென்னிஸ் உலகக் கோப்பை என அழைக்கப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா - மகரோவா இணை, சீன தைபேயின் ஹயோ - ருமேனியாவின் மோனிகா இணையை எதிர்கொண்டது. இப்போட்டியில், ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்னினா இணை, 6-0, 6-0 என்ற நேர் செட்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம், விம்பிள்டனில் வெஸ்னினா - மகரோவா இணை முதல் பட்டத்தை வென்று முத்திரைப் பதித்தது. ஒட்டுமொத்தமாக வெஸ்னினா இணை வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
இதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில், போலந்தின் லூகாஸ் - பிரசிலின் மார்செல்லோ இணை, 5-7, 7-5, 7-6, 3-6, 13-11 என்ற செட்கணக்கில் ஆஸ்திரியாவின் ஆலிவர் - குரோஷியாவின் மாட் பாவிக் இணையை போராடி தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது.