ஆசிய தடகள போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற 2 தடகள வீரர்களுக்கு உதகை மாவட்டம் குன்னூரில் சிறப்பான வரவேற்பு

Jul 17 2017 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆசிய தடகள போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டு தடகள வீரர்களுக்கு உதகை மாவட்டம் குன்னூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஊரக கூடைபந்து முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி செப்டம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், தஞ்சை தூய அந்தோணியார் பள்ளியும், பெண்கள் பிரிவில் தஞ்சை தூய இருதய அந்தோணியார் பள்ளியும் தகுதி பெற்றது.

தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ரெபிட் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 5 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், பள்ளி மாணவர்கள், பொதுப்பிரிவினர் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 10 லட்சம் ரூபாய் செலவில் ராமநாதபுரமத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிகூடம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் திரு.நடராஜன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ராமநாதபுரத்தில் திறன்வாரவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

திருச்சியில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, முசிற, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஆசிய தடகள போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் மற்றும் வெற்றிப் பதக்கம் வென்ற இரண்டு தடகள வீரர்களுக்கு உதகை மாவட்டம் குன்னூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வரும், புதுக்கோட்டையச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தங்கப் பதக்கமும், சசி என்பவர் என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு குன்னூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், வேலூர் தடகள சங்கம் சார்பில், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2709.00 Rs. 2897.00
மும்பை Rs. 2728.00 Rs. 2889.00
டெல்லி Rs. 2740.00 Rs. 2902.00
கொல்கத்தா Rs. 2740.00 Rs. 2899.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00