பிரிட்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ ஃபார்முலா-1 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில், பிரிட்டனின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் : ஒட்டுமொத்தமாக ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தில் நீடிக்கிறார்
Jul 17 2017 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ ஃபார்முலா-1 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில், பிரிட்டனின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தில் நீடிக்கிறார்.
நடப்பு ஆண்டுக்கான சர்வதேச ஃபார்முலா-1 சாம்பியன்ஷிப் தொடரின், 10-வது சுற்று பந்தயம், பிரிட்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தயப் பாதையில், "பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ" என்ற பெயரில் நடைபெற்றது. இதில், மெர்சிடீஸ் அணியைச் சேர்ந்த பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், ஃபின்லாந்தின் Valtteri Bottas மற்றும் ஃபெர்ராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. எனினும், இப்பந்தயத்தில் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்த லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்து அசத்தினார்.
சக அணியைச் சேர்ந்த Bottas, 2-வது இடத்தையும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெட்டல் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
எனினும், 10 சுற்றுகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 177 புள்ளிகளுடன் வெட்டல் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை விட ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் ஹாமில்டன் 2-வது இடத்தில் உள்ளார். ஃபார்முலா-1 கார் பந்தயத்தின் 11-வது சுற்று, ஹங்கேரியில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.