ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் : ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்வரெவ், ஹாசே ஆகியோருடன் 18 வயதான கனடா வீரர் ஷெபோவலோவும் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Aug 12 2017 7:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்வரெவ், ஹாசே ஆகியோருடன் 18 வயதான கனடா வீரர் ​ஷெபோவலோவும் அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

கனடாவின் மான்டெரியால் நகரில் நடைபெற்றுவரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில், 18 வயதான கனடாவின் டெனிஸ் ஷெபோவலோவ், ஃபிரான்சின் மன்னாரினோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், முதல் செட்டை 2-6 என்ற கணக்‍கில் இழந்த ஷெபோவலோவ், பின்னர், தனது அபார சர்வீஸ்கள் மூலம், அடுத்த இருசெட்களையும் வென்று மன்னாரினோவுக்‍கு அதிர்ச்சியளித்தார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்‍கில் ஷெபோவலோவ் வெற்றிபெற்று அரையிறுதிக்‍கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில், ஜெர்மனியின் அலெக்‍ஸ் ஸ்வரெவ், தென்னாப்பிரிக்‍காவின் கெவின் ஆண்டர்சனை, 7-5, 6-4 என்ற நேர்செட்கணக்‍கில் தோற்கடித்து அரையிறுதிக்‍கு தகுதி பெற்றார்.

இன்னொரு காலிறுதி ஆட்டத்தில், 8 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், ராபர்டோ பாடிஸ்டா அகட்டும் மோதினர். இப்போட்டியில், ஆரம்பம் முதலே தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், 6-4, 6-4 என்ற நேர்செட்கணக்‍கில் வெற்றிபெற்று அரையிறுதிக்‍கு முன்னேறினார்.

இதேபோல், நெதர்லாந்தின் ஹாசே, ஆர்ஜென்டினா வீரர் டியாகோவை 4-6, 6-3, 6-3 என்ற செட்கணக்‍கில் போராடி வென்று, அரையிறுதிக்‍கு தகுதிபெற்றார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில், ரோஜர் ஃபெடரர், ஹாசேவையும், ஸ்வரெவ், ஷெபோவலோவையும் எதிர்கொள்ளவுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2854.00 Rs. 3052.00
மும்பை Rs. 2875.00 Rs. 3044.00
டெல்லி Rs. 2887.00 Rs. 3058.00
கொல்கத்தா Rs. 2887.00 Rs. 3055.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.20 Rs. 42200.00
மும்பை Rs. 42.20 Rs. 42200.00
டெல்லி Rs. 42.20 Rs. 42200.00
கொல்கத்தா Rs. 42.20 Rs. 42200.00